Enable Javscript for better performance
தில்லி தேர்தல்: மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை - Dinamani

சுடச்சுட

    

    தில்லி தேர்தல்: மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

    By புது தில்லி,  |   Published on : 28th January 2015 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மதுக்கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறையும், ஓட்டுப்பதிவு நாள் அன்று சம்பளத்துடன் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

    தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப்பதிவு தினமான பிப்ரவரி 7-ஆம் தேதியன்றும், அதற்கு முந்தைய 48 மணி நேரங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 10-ஆம் தேதியன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் வசிக்கும் தில்லி வாக்காளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு மத்திய பணியாளர் நலத் துறைக்கும், தில்லி தலைமைச் செயலாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தினக்கூலி தொழிலாளர்களுக்கும், தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. இதை மீறினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். ஆனால், பணியாளரின் விடுமுறை காரணமாக, ஆபத்தோ அல்லது தொடர்ச்சியான இழப்போ ஏற்படுமானால் அவருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai