Enable Javscript for better performance
நித்தாரி தொடர் கொலை: கோலியின் தூக்கு, ஆயுள் தண்டனையாக மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நித்தாரி தொடர் கொலை: கோலியின் தூக்கு, ஆயுள் தண்டனையாக மாற்றம்

    Published on : 28th January 2015 05:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    surinder

    நித்தாரி தொடர் கொலை வழக்கில் குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றி, அலகாபாத் உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    உத்தரப்பிரதேச மாநிலம், நித்தாரி கிராமத்தில் 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் கொலைகள் குறித்த வழக்கில் குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கோலி, கருணை மனு அனுப்பியிருந்தார்.

    ஆனால் கருணை மனு மீது உரிய முடிவு எடுக்க காலதாமதமானதால் சுரீந்தர் கோலியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கோலியின் கருணை மனு மீது முடிவெடுக்க மூன்று ஆண்டு காலம் தாமதமானதாக வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் இன்று சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai