Enable Javscript for better performance
நீராவி முருகன் 55 பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக தகவல்: பிப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவல்- Dinamani

சுடச்சுட

    

    நீராவி முருகன் 55 பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக தகவல்: பிப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    Published on : 28th January 2015 04:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pardon

    துரைப்பாக்கம் எம்.சி.என். நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை வேலத்திடம், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

    இந்த நிகழ்வை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி, தனது செல்போன் கேமரா மூலம் பதிவு செய்தார். அந்த மாணவி, அதை வாட்ஸ் அப் மூலம் தனது தோழிகளுக்கு அனுப்பினார். தோழிகள் தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினர். இவ்வாறு அந்தக் காட்சி சென்னை நகரம் முழுவதும் பரவியது.

    இதன் விளைவாக துரைப்பாக்கம் போலீஸார் அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.

    குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் வேலத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டியது தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்த ரெளடி நீராவி முருகன் என்பதும், மோட்டார் சைக்கிள் ஓட்டியது தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.

    இதில் ஹரிகிருஷ்ணனை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். முக்கிய எதிரியான நீராவி முருகன் தலைமறைவாக இருந்து வந்தார். அடையாறு துணை கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் மகேஸ் குமார், ஜெயசிங், சிவகுமார், வீரகுமார், சப்–இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, ஏட்டு விஜயகுமார் மற்றும் போலீசார் புஷ்பராஜ், தாமோதரன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரண நடத்தி, நீராவி முருகனை திருநெல்வேலியில் பிடித்தனர்.

    பிடிபட்ட முருகனை போலீஸார் விசாரணை செய்வதற்கு சென்னைக்கு அழைத்து வந்தனர். ரகசிய இடத்தில் முருகனிடம் போலீஸார் விசாரணை செய்தனர். 

    அப்போது நடந்த விசாரணையின் போது  காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல் உள்பட பல இடங்கிளல் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது செயின் பறிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது  தெரியவந்துள்ளது.  மேலும்  இதுவரை 55 பெண்களிடம் நீராவி முருகன் சங்கலி பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    தூத்துக்குடியில் கடந்த 2011–ம் ஆண்டு தி.மு.க. பிரமுகர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் போலீசாரால் நீராவி முருகன் தேடப்பட்டு வந்தார்.  இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்து, பின்னர் அதே ஆண்டு  மே மாதம் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை நீதிமன்றததில் ஆஜர்படுத்திய போலீஸார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

     ஜாமினில் வந்த நீராவி முருகன், அடுத்தடுத்து வழிபறி, வீடு புகுந்து கொள்ளை அடித்து வந்தள்ளார்.  கடந்த மாதம் 19–ந்தேதி துரைப்பாக்கத்தில் ஆசிரியை வேலத்திடம் செயின் பறித்துள்ளார் நீராவி முருகன், கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்போனில் அந்தகாட்சியை படம் பிடித்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதால், தற்போது போலீஸில் சிக்கியுள்ளார்.

     இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீராவி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வரும் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai