Enable Javscript for better performance
பஞ்சாயத்து நிர்வாக கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் மருத்துவமனையில் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாயத்து நிர்வாக கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

    By செல்வமுத்து  |   Published on : 28th January 2015 05:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெடுங்காடு பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் தேவதாஸ் (34). பெயிண்டராக உள்ள இவர், கடந்த 18-ம் தேதி நெடுங்காடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பஞ்சாயத்து நிர்வாகத்தின் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வழுக்கி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    அப்பகுதியினர் அவரை காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர், புதன்கிழமை  உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai