Enable Javscript for better performance
பன்றிக் காய்ச்சலில் இருந்து 2 வயது சிறுவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை - Dinamani

சுடச்சுட

    

    பன்றிக் காய்ச்சலில் இருந்து 2 வயது சிறுவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை

    By dn  |   Published on : 28th January 2015 03:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    DSC_0322

    கொருக்குபேட்டை சுதந்திரபுரத்தைச் சேர்ந்த வெட்கடேசன் சங்கீதாவின் இரண்டு வயது சிறுவன் கோகுல் கடந்த 21ம் தேதியன்று கடுமையான ஜூரம், சளி மற்றும் மூச்சுத் திணறலோடு உள் நோயாளியாக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    தனுது குடும்பத்தாருடன் 2 நாட்களுக்கு முன் தான் திருப்பதி சென்று வந்தார். குழந்தை அனுமதிக்கப்பட்ட பொழுது மிகவும் மோசமாக நாடித் துடிப்புகள் தெரியாத நிலையில் இருந்ததாலும், மூச்சுத்திணறலும் இருந்த காரணத்தால் குழந்தைக்கு மூச்சுக் குழாயினுள் ஒரு செயற்கை குழாய் பொருத்தப்பட்ட செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

    பன்றிக் காய்ச்சல் இருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாக குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு தனி வார்டில் உள்ள அனைத்து நோயாளிக்கும் Tamiflu  மருந்து கொடுக்கப்பட்டது.

    மூன்று நாட்கள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டவுடன் மூச்சு சீரான நிலையில் இருந்த காரணத்தால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. சிறுவன் உடலை உடனே பரிசோதித்ததால் சிறுவனை காபாற்ற முடிந்ததாக ஸ்டான்லி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai