Enable Javscript for better performance
பர்த்வான் குண்டு வெடிப்பு வழக்கு: 4 தீவிரவாதிகள் கைது - Dinamani

சுடச்சுட

    

    மேற்கு வங்க மாநில பர்த்வானில் கடந்த ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 4 தீவரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-இல், பர்த்வான் மாவட்டத்தின் ஹக்ரகார் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியாக ஜமாத்-உல்-முஜஹெய்தின் அமைப்பைச் சேர்ந்த ஷாஹ்நூர் ஆலம் கைது செய்யப்பட்டார்.

    தற்போது இதில் சம்பந்தப்பட்ட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள், ஜாமாத்-உல்-முஜஹெய்தின் அமைப்பைச் சேர்ந்த தலிம் ஷேக், மொதியுர் ரஹ்மான், ஹமிபுர், கியாசுதின் எனத் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai