Enable Javscript for better performance
பார்களை மீண்டும் திறக்க லஞ்சம் : அமைச்சருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    பார்களை மீண்டும் திறக்க லஞ்சம் : அமைச்சருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

    Published on : 28th January 2015 03:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளாவில் மூடப்பட்ட பார்களை மீண்டும் திறக்க லஞ்சம் வாங்கியதாக அந்த மாநில நிதியமைச்சர் மணி மீது தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இது தொடர்பாக புரட்சிகர சோஷ்யலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தாமரக்ஷண் தாக்கல் செய்திருந்த மனுவில், லஞ்சப் புகார் தொடர்பாக அமைச்சர் மணி, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை என கூறியிருந்தார்.

    இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அசோக் பூஷன், நீதிபதி ஷபீக், அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர் தண்டபாணி, "லஞ்சப் புகாருக்கு ஆதரமாக கொடுக்கப்பட்ட ஒலிநாடாவின் உண்மைத்தன்மை குறித்து அறிவியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனால்தான் விசாரணை தாமதமாகியுள்ளது' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை கோருவதற்கு உகந்த சூழல் இல்லை' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai