Enable Javscript for better performance
பிப்ரவரி 1ல் திருக்கழுகுன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    பிப்ரவரி 1ல் திருக்கழுகுன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

    By dn  |   Published on : 28th January 2015 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்குழுகுன்றம் உருத்திரகோடி  பட்சிதீர்த்தம் என்ற அழைக்கப்படும் ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா பிப்ரவரி 1ந் தேதி நடைபெறுகிறது.

     இந்த கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், மாலை வாஸ்துசாந்தி, மிருகசங்கிரஹனம், பிரவேசபலி, ராஷோகத்ன ஹோமம், அங்குரார்பணமும் நடைபெறுகிறது.

     வியாழக்கிழமை  காலை நவகிரஹ ஹோமம், யாக அலங்காரம், ஆசாரிய வரணமும் மாலை ரக்ஷôபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷனம், அதிவாசயாக பூஜை, பூர்ணாஹூதி 1ம் காலமும் நடைபெறும்.

     வெள்ளிக்கிழமை காலை யாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதணை 2ம் காலமும், மாலை யாகபூஜை, பூர்ணாஹூதி 3ம் காலமும் நடைபெறும்.

    சனிக்கிழமை காலை யாகபூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம், பூர்ணாஹூதி தீபாராதணை 4ம் காலமும், மாலை யாக பூஜை, ஜீவந்யாசம், அதிவாச யாக பூர்த்தி 5ம் காலமும் நடைபெறுகிறது.

    ஞாயிற்றுகிழமை காலை அவபிருத யாகம், மஹாபூர்ணாஹூதி, யாத்ராதானம், கலசபுறப்பாடு நடைபெற்று மீன லக்னத்தில்  திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதகிரீஸ்வரர்  சுவாமி பிரிவார சகிதம் மஹாகும்பாபிஷகம் மற்றும் மஹா அபிஷேகம் காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள்  நடைபெறவுள்ளது.

     இரவு திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகளின் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.ஆர்.எஸ்.விஜய சிவாச்சாரியார், டி.சி.ஏ.வேதமூர்த்தி சிவாச்சாரியார், திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆய்வாளர் இரா.அலமேலு, தக்கார் மற்றும் செயல் அலுவலர் இரா.கேசவராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai