Enable Javscript for better performance
பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுவலி- Dinamani

சுடச்சுட

    

    ஹூக்ளி மாவட்டத்திலுள்ள ஆரம்பாஹ் தர்காவில் நடந்த சந்தனக்கூடு விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் வாந்தி, வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தர்காவில் பிரசாதமாக கிச்சடி வழங்கப்பட்டது. நச்சாகிப் போயிருந்த பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கிச்சடிக்கு பயன்படுத்திய பருப்பு கலப்பட பருப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கிச்சடியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக ஆரம்பாஹ் நகராட்சி தலைவர் ஸ்வப்பன் நந்தி கூறினார்.

    பிரசாதத்தை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்கள் தற்போது அபாய கட்டத்தை கடந்து நலமாக உள்ளனர். விரைவில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று ஹூக்ளி மாவட்ட மருத்துவ அதிகாரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai