Enable Javscript for better performance
பிரபல ஜிம்னேஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - Dinamani

சுடச்சுட

    

    பிரபல ஜிம்னேஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

    By dn  |   Published on : 28th January 2015 03:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Selvi Sowmitha

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஜிம்னேஸ்டிக்ஸ் வீராங்கனை சௌமிதா டே, மூளை மற்றும் நரம்பு பாதிப்பு தொடர்பான நோயினால் தாக்கப்பட்டு, தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருவதையும், அவர் தனது மேல் சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாமல் சிரமப்படுகிறார் என்பதையும் பத்திரிகைச் செய்தி வாயிலாக வெளியிட்டிருந்தார்.

    இதை ஏற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிகிச்சை பெற்று வரும் செல்வி சௌமிதா டேயின் மருத்துவ செலவுகளுக்காக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ.5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai