Enable Javscript for better performance
புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி பாரதிய கிசான்சங்கத்தினர் தர்னாப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி பாரதிய கிசான்சங்கத்தினர் தர்னாப் போராட்டம்

    By மோகன்ராம்  |   Published on : 28th January 2015 04:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டையை  வறட்சி மாவட்டமாக  அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற  பாரதிய கிசான் சங்கத்தினர் அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவர் வரும் வரை ஆட்சியரகம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோரிக்கைகள்:

    மாயனூர் தடுப்பணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காவிரி நீர் வரும் வகையில் தொண்டைமான் கால்வாய்த் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.மேட்டூர் அணையிலிருருந்தும்,ஆலாடி அணையிலிருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தை இணைக்க வேண்டும்.60 வயதான விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.அரசு அறிவித்துள்ள கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சிபாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் ரத்துசெய்யவேண்டும்.

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மாநிலதுணைத்தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஆர்.சேகர் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக வாயிலில் நடைபெற்ற தர்ணாப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ரவி,மைக்கேல், சைவராசு, ராமமூர்த்தி,சத்யநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் மேலாடை அணியாமல்,கையில் மண் சட்டியும்,கழுத்தில் தூக்குக் கயிறுடனும் ஊர்வலமாக வந்தனர்.

    இதனிடையே காவல்துணை கண்காணிப்பாளர் எஸ். பாலகுரு விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஆட்சியர் வெளியில் சென்றதால் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்துவிட்டுச்செல்லலாம் என்ற ஆலோசனையை நிராகரித்துவிட்டு சுமார் 3 மணிநேரம் காத்திருந்தனர். இந்நிலையில், கறம்பக்குடிப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற ஆட்சியர் சு.கணேஷ் அலுவலகத்துக்குத் திரும்பியதையடுத்து அவரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தபிறகே  அனைவரும் கலைந்து சென்றனர்.இதன்காரணமாக அப்பகுதியைக் கடந்து செல்லவேண்டிய வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai