Enable Javscript for better performance
போடோ பயங்கரவாதிகளிடம் விசாரிக்க அசாம் போலீஸார் பெங்களூரு வருகை- Dinamani

சுடச்சுட

    

    போடோ பயங்கரவாதிகளிடம் விசாரிக்க அசாம் போலீஸார் பெங்களூரு வருகை

    By dn  |   Published on : 28th January 2015 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கைது செய்யப்பட்டுள்ள அசாம் பயங்கரவாதிகளிடம் விசாரணை செய்ய அசாம் மாநில போலீஸôர் விரைவில் பெங்களூரு வர உள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.

    இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஜன. 24-ஆம் தேதி பெங்களூரு காட்டன் பேட்டை காவல் சரகத்தில் போடோ பயங்கரவாதி பிர்காஸ் சர்ஜாரி கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திங்கள்கிழமை மேலும் ஒரு போடோ பயங்கரவாதி,  சஞ்சீவ்போடோலாய் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெங்களூருவில் கடந்த ஜன. 21-ஆம் தேதிமுதல் வந்து தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. போடோ அமைப்பின் செயலாளராக இருந்ததாகக் கூறப்படும் இவர் வங்கதேசத்தில் 2009 முதல் 2012 வரை பயரங்கவாத பயிற்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    போடோ பயங்கரவாத அமைப்பின் ம்க்கிய நபரான இவரை, அசாம் மாநில போலீஸôர் தீவிரமாக தேடி வருகின்றனர். எனவே கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை செய்ய அம்மாநில போலீஸôர், விரைவில் பெங்களூரு வர உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் சஞ்சீவ் போடோலாய் போலீஸôரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அசாம் மாநிலம் சாந்திப்பூர் கிராமத்தில் 2014-ஆம் ஆண்டு டிச. 23-ஆம் தேதி கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டனர். அதில் முக்கிய பங்காற்றிவர்களில் ஒருவர் சஞ்சீவ் போடோலாய் என்றார் அவர்.                                                          

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai