Enable Javscript for better performance
மகாத்மா காந்தி பிறந்த நாளில் பாஜகவை வீழ்த்த சபதமேற்க வேண்டும்: இளங்கோவன்- Dinamani

சுடச்சுட

    

    மகாத்மா காந்தி பிறந்த நாளில் பாஜகவை வீழ்த்த சபதமேற்க வேண்டும்: இளங்கோவன்

    By dn  |   Published on : 28th January 2015 06:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாத்மா காந்தி பிறந்த நாளான ஜனவரி 30-ஆம் தேதி தேசிய அடையாளங்களை அழிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை வீழ்த்த சபதமேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பொதுவாக இந்தியர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம். எதை சகித்துக் கொள்ள வேண்டுமோ அதனை சகித்துக் கொள்ளலாம். ஆனால், இந்திய விடுதலைக்காக தமது வாழ்நாளையே அர்ப்பணித்த மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பாஜகவினர் செயல்படுவதை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.மகாத்மாவைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்போம் என தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு இந்து மகா சபைக்கு துணிச்சல் வந்துள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங்களே காரணம்.

    மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயல். காந்தியை கொலை செய்த கோட்சேவைப் போற்றுகிற பாசிச சக்திகள் நாட்டில் மதவெறியைத் தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ளன.மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் நமது தேசிய அடையாளங்களை சிதைத்து, சீர்குலைக்கும் முற்சிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலைக்காகப் போரிட்ட மாபெரும் தலைவர்களின் புகழுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பாஜகவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதனை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக்களுக்கும் உண்டு.

    இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதி நமது தேசிய அடையாளங்களை அழிக்க முயற்சிக்கும் சக்திகளை இனம் கண்டு வீழ்த்த ஒவ்வொருவரும் சபதமேற்க வேண்டும் என இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai