Enable Javscript for better performance
மணல் கடத்தலைத்தடுத்த போலீஸ் அதிகாரியை கொல்ல முயற்சி லாரி உரிமையாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தலைத்தடுத்த போலீஸ் அதிகாரியை கொல்ல முயற்சி லாரி உரிமையாளர் கைது

    By தன.திராவிட மணி,  |   Published on : 28th January 2015 01:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம்,  கமுதி அருகே மணல் கடத்தலைத்தடுத்த சார்பு ஆய்வாளரைக் கொல்ல முயன்றதாக லாரி உரிமையாளர் ஒருவரை போலீஸார், செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    உதவி காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவில், சார்பு ஆய்வாளர் ராஜ கென்னடி தலைமையி்ல் தலைமை காவலர்கள் சரவணன், மகா பிரபு, மற்றொரு சரவணன் ஆகியோர் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் ஸ்ரீவழிவிட்ட அய்யனார் கொவில் அருகே வாகன சோதனையி்ல் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி லாரியி்ல ம ஆற்று மணல் ஏற்றி்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரியை சார்பு ஆய்வாளர் ராஜ கென்னடி மறித்து நிறுத்தினார். அப்போது லாரி உரிமையாளரும், ஓட்டுனருமான காடமங்கலம் செந்தூரான்(40) என்பவர், சார்பு ஆயாவாளர் ராஜ கென்னடியை இழிவாகத் திட்டி்ப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொல்ல முயன்றாராம். இதையடுத்து செந்தூரான் மீது வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் ராஜ கென்னடி, மாணிக்கம் ஆகியோர் கைது செய்தனர். கமுதி நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட செந்தூரானை 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் எஸ்.கணபதி சாமி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai