Enable Javscript for better performance
ரேஷன் அரசி பதுக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே ரேஷன் அரிசியை பதுக்கியவரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீஸார் கைது செய்தனர்.

    காரிமங்கலம் அருகே முக்களத்தைச் சேர்ந்தவர் பாபு(46). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை, உணவகம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில், அவரது கடை மற்றும் உணவகத்தில் ரேஷன் அரிசி முறைகேடாக பதுக்கி வைத்திருப்பதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலானய்வு பிரிவு போலீஸôருக்கு தவகல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் முக்களத்திற்குச் சென்று அவரது மளிகை கடை, உணவகத்தில் சோதனை நடத்தினர்.

    இதில் 100 கிலோ ரேஷன் அரிசி, பாமாயில் 10 பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரேஷன் அரிசி, பாமாயிலை பதுக்கிய பாபுவை போலீஸார் கைது செய்தனர். மேலும், அரிசி, பாமாயில் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai