Enable Javscript for better performance
விரைவில் இந்தியா வருகிறார் சிங்கப்பூர் அதிபர்- Dinamani

சுடச்சுட

    

    சிங்கப்பூர் அதிபர் டான் கெங் யாம் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக, அந்நாட்டின் போக்குவரத்துத் துறை மந்திரி  லூய் டக் யூ தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் விடுதலை பெற்ற போது, எங்கள் நாட்டுடன் உறவை முதலில் வளர்த்துக் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அணிசேரா நாடுகள் அமைப்பில் சிங்கப்பூர் இணைவதற்கு இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

    சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ கான் யூ 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்ட முதல் நாடு இந்தியா எனவே .சிங்கப்பூரின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு தனி இடம் உண்டு என்று கூறினார்

    மேலும் சிங்கப்பூர் அதிபரின் இந்திய பயணம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என்றும் கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai