Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பா.ஜ.,வேட்பாளர் சுப்ரமணியன் வேட்பு மனு ஏற்பு - Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பா.ஜ.,வேட்பாளர் சுப்ரமணியன் வேட்பு மனு ஏற்பு

    By dn  |   Published on : 28th January 2015 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசிலனை செய்யப்பட்டு பா.ஜ.க வேட்பாளர் சுப்ரமணியனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரி மனோகரன் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து வருவாய் கோட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலரான மனோகரன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். பா.ஜ.,வேட்பாளர் சுப்ரமணியன் தனது வேட்பு மனுவில் தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து குறிப்பிடவில்லை என காங்கிரசும், அதிமுக.,வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, சுப்ரமணியனின் வேட்புமனு தொடர்பான முடிவு புதன்கிழமை பிற்பகல் ஏற்கப்பட்டது. மொத்தம் 46 வேட்பாளர்களில், 12 பேரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  34 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai