Enable Javscript for better performance
70 சதவீதம் இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவே விரும்புகின்றனர்: சுதர்சன நாச்சியப்பன்- Dinamani

சுடச்சுட

    

    70 சதவீதம் இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவே விரும்புகின்றனர்: சுதர்சன நாச்சியப்பன்

    By ஜெகஜோதி  |   Published on : 28th January 2015 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தலையிலான குழு, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட அவர்களது குறைகளை கேட்க கருத்து கேட்பு  கூட்டம் ஒன்றை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை அகதிகளில் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்லவே விரும்புகின்றனர் என்றும், 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்க விரும்புவதாகவும், 10 சதவீதம் பேர் கல்வி,வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்ல தயார் என்று கூறியதாக கூறினார். மேலும் மீனவர்கள் பிரச்னைகளுக்கு இரு நாட்டு அரசுகளும் கூட்டு முயற்சி செய்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 87 படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் அதிகாரிகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai