சுடச்சுட

    

    இன்னுமொருவர் வாரிசோடு வெளியேறினால் காங்கிரசுக்கு விமோசனம் : இளங்கோவன் சூசகம்

    By dn  |   Published on : 30th January 2015 05:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EVKSE

    காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், ப. சிதம்பரம் குறித்து சூசகமான ஒரு கருத்தையும் கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    கங்கை தூய்மைப்படுகிறதோ இல்லையோ, தாங்கள் (ஜெயந்தி நடராஜன்) காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பலமடங்கு தூய்மைப்படும்.

    இன்னும் ஒருவர் தமது வாரிசோடு வெளியேறினால் தமிழக காங்கிரசுக்கு நிச்சயம் விமோசனம் ஏற்படும். ஏனெனில் கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக பத்தாண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், மக்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிந்த போது காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வளவு வேதனைப்பட்டர்கள் என்பதை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

    தியாகிகளை காங்கிரஸ் என்றைக்குமே மதித்திருக்கிறது. துரோகிகளையும், சந்தர்பவாதிகளையும் காங்கிரஸ் கட்சி தூக்கி எறிய எப்போதும் தயங்கியதில்லை. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நீங்களாகவே வெளியேறியதற்கு மீண்டும் நன்றியை தெரிவித்து, எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai