Enable Javscript for better performance
காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைகிறார் ஜெயந்தி நடராஜன் ?- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைகிறார் ஜெயந்தி நடராஜன் ?

    Published on : 30th January 2015 10:21 AM  |   அ+அ அ-   |    |  

    jayanthi natarajan

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு பிரச்னைகளில் இருந்து தப்பிக்க தன்னை பலிகடா ஆக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கொடுத்த பல்வேறு அழுத்தங்கள் காரணமாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்ற முறையில் பல திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாமல் போய்விட்டது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கட்சிப் பொறுப்பிற்கு மாற்ற மேலிடம் கொடுத்த உத்தரவையும் கடைசி வரை நிறைவேற்றவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai