Enable Javscript for better performance
ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைகளுக்குச் செல்லும் அரசியல் தலைவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைகளுக்குச் செல்லும் அரசியல் தலைவர்கள்

    By dn  |   Published on : 07th March 2015 04:23 PM  |   அ+அ அ-   |    |  

    collage

    குர்கானில் உள்ள மருத்துவமனையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் உடல் நலப் பரிசோதனைக்காக சென்றார்.

    வட இந்தியாவில் இந்த நிலை என்றால், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாகர்கோயிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரப்பட உள்ளார்.

    சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று இரவு மேதந்தா மருத்துவமனையில் முலாயம் சிங் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று குர்கானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முழு உடல் நலப் பரிசோதனை செய்து கொண்டார்.

    63 வயதாகும் ராஜ்நாத் சிங், மேதந்தா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு அவர் மருத்துவனையில் இருந்து வீடு திரும்பினார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp