Enable Javscript for better performance
ராமதாஸ் விடுத்துள்ள உலக மகளிர் தினச் செய்தி - Dinamani

சுடச்சுட

    

    ராமதாஸ் விடுத்துள்ள உலக மகளிர் தினச் செய்தி

    By dn  |   Published on : 07th March 2015 11:59 AM  |   அ+அ அ-   |    |  

    ramadoss

    மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் சர்வதேச மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. முறைப்படி அறிவித்தது. பிரான்ஸ் நாட்டு மகளிர் நடத்திய போராட்டத்தையும், அந்தப் போராட்டத்திற்கு பணிந்து மகளிருக்கு  வாக்குரிமை அளித்து அந்நாட்டு மன்னர் லூயிஸ் பிளாங்க் மார்ச் 8 ஆம் தேதி உத்தரவிட்டதையும் நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது.

    இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும்  சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன. 

    மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அதற்கான முதல்படியாக மது ஒழிக்கப்படவேண்டும். அந்த இலக்கை நோக்கி போராட இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp