குற்றம் கடிதல் படத்திற்கு தேசிய விருது

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழியில் சிறந்த படத்திற்கான விருது 'குற்றம் கடிதல்' என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, காக்கா முட்டை சிறந்த குழனிதைகள்
குற்றம் கடிதல் படத்திற்கு தேசிய விருது

62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழியில் சிறந்த படத்திற்கான விருது 'குற்றம் கடிதல்' என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, காக்கா முட்டை குழந்தைகளுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக குயின் படத்தில் நடித்த கங்கணா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த நடிகராக விஜய் (கன்னடம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த பொழுதுபோக்குப் படமாக பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படமாக மராத்தி மொழி படமான கோர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பாடகியாக உத்ரா உன்னிக்ருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை சைவம் படத்திற்காக நா. முத்துகுமார் பெறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com