உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ம் தேதி காலமான சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தேசிய மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து பாராளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.