மகாராஷ்டிராவில் 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்திலுள்ள ரங்கா கிராமத்தைச் சேர்ந்த விவேக் குஷால் டெனேட் என்கிற சிறுவன் தனது பாட்டியுடன் ஆடுகளை மேய்க்க சென்றபோது அங்கிருந்த 250 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சிறுவனை மீட்கும் பணியில் விடியவிடிய ஈடுபட்டு வருகின்றனர்.