
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி கூட்டம் இன்று கூடியது. ரூ.35 கோடிக்கான இடைகால அரசு செலவீனங்களுக்கான ஒப்புதலை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சி தலைவர் வி.வைத்தியலிங்கம் பேசும் போது வருவாய் துறை மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து கூடுதல் தொகை செலவு செய்தது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.