Enable Javscript for better performance
அம்பேத்கரைப் பற்றிப் பேசியதால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார் வேமூலா: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு - Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கரைப் பற்றிப் பேசியதால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார் வேமூலா: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ""மாணவர்கள் மத்தியில் சட்டமேதை அம்பேத்கர் பற்றிப் பேசியதால், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார்; அவரது சாவுக்குக் காரணமான 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்'' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

    சட்டமேதை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினம், தில்லியில் உள்ள தால்கடோரா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் அரவிந்த் கேஜரிவால் மேலும் பேசியதாவது:

    மாணவர்கள் மத்தியில் அம்பேத்கர் குறித்துப் பேசிய வேமூலா, தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார். அவரது தற்கொலைக்கு காரணமாணவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று முழக்கங்களை அம்பேத்கர் முன்வைத்தார். ஆனால், நாட்டில் கருத்துச் சுதந்திரம் கிடையாது; சமத்துவம் கிடையாது; சகோதரத்துவமும் கிடையாது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் "பாரத் மாதா கீ ஜே' என்று கோஷமிடக் கூடாது என்று கூறும் அவர்கள் (பாஜக அரசு), நாட்டின் பிற பகுதிகளில் "பாரத் மாதா கீ ஜே' என்று முழங்காதவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

    அம்பேத்கரின் பிறந்த இடத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மாலையிட்டால் மட்டும் அவருடைய கனவுகள் நிறைவேறிவிடுமா? அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பவர்கள், அவரை மதிப்பது போல் பாசாங்கு செய்யக் கூடாது. (பிரதமர் மோடியை மறைமுகமாகச் சாடினார்) என்று கேஜரிவால் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai