Enable Javscript for better performance
ஆரசு பள்ளி வகுப்பறையில் மதுப்பாட்டில்கள், சிகரெட்டுகள்: தொடர்கிறது அட்டூழியம் - Dinamani

சுடச்சுட

    

    ஆரசு பள்ளி வகுப்பறையில் மதுப்பாட்டில்கள், சிகரெட்டுகள்: தொடர்கிறது அட்டூழியம்

    By dn  |   Published on : 15th April 2016 09:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் பூட்டிய அரசு பள்ளி கதவை உடைத்து உள்ளே அமர்ந்து மதுக்குடித்து, வகுப்பைறையையும் உடைத்து நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் குழுமணி அருகேயுள்ளது எட்டரை கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 - முதல் 5 -ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 272 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 1 தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 10 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

    தமிழ் புத்தாண்டை ஒட்டி வியாழக்கிழமை விடுமுறை என்பதால் பள்ளி திறக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை பள்ளியை திறந்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளி வகுப்பறை கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வகுப்பறையில் அமர்ந்து மதுக்குடித்துள்ளனர். மதுப்பாட்டில்கள், டம்ளர்கள், நொறுக்குத்தீனி மற்றும் சிற்றுண்டி சாப்பிட்ட குப்பைகள் ஆகியவற்றை போட்டுச் சென்றுள்ளனர்.

    மேலும் வகுப்பறையின் ஓடுகளை உடைத்தும், வகுப்பு கரும்பலகையில் ஆபாச வார்த்தைகளை எழுதியும் விட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோரும் சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தற்போது நடந்திருப்பது மிகவும் மோசமான செயலாக உள்ளது. பள்ளி வகுப்பறையை தவறாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி அடித்து நொறுக்கியும் சென்றது கண்டிக்கத்தக்கது என்றனர். சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai