Enable Javscript for better performance
குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு

    By dn  |   Published on : 15th April 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pranab mukherjee

    குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வருகிறார்.

    இதையொட்டி, ஏடிஜிபி ஆஷிஸ் பெங்காரா தலைமையில் மூன்று கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு, குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இக் கல்லூரிக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு வருகிறார். போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அவர், பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரணாப், மாலை 4.30 மணியளவில் கோவை புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி செல்கிறார்.  குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai