Enable Javscript for better performance
ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி: சுப்ரமணிய சாமி - Dinamani

சுடச்சுட

    
    subramanian swamy

    ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும். ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று கூறினார்.

    மேலும், தமிழகத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். தமிழகத்தில் ஜிஹாத்தி தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

    இந்த விஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.  தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. அடுத்து வரவிருக்கும் புதிய அரசு, உருவாகி வரும் ஜிஹாத்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

    மேலும், மதத்தின் பெயரால் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. அப்படி ஒரு அரசு செயல்படுமானால் அதை கலைக்கவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai