Enable Javscript for better performance
\\\"தெறி\\\' திரைப்பட விளம்பர பதாகை பிரச்னை: காரைக்குடியில் விஜய் ரசிகர்கள்- போலீஸ் மோதல், தடியடி- Dinamani

சுடச்சுட

    

    "தெறி' திரைப்பட விளம்பர பதாகை பிரச்னை: காரைக்குடியில் விஜய் ரசிகர்கள்- போலீஸ் மோதல், தடியடி

    By காரைக்குடி  |   Published on : 15th April 2016 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடியில் வியாழக்கிழமை "தெறி' திரைப்பட விளம்பர பதாகையை அப்புறப்படுத்துவது தொடர்பான பிரச்னையில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் தடியடி நடத்தப்பட்டது.

     காரைக்குடி செக்காலைச் சாலையில் உள்ள திரையரங்கில் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் அனுமதி பெற்ற எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக விளம்பர பதாகைகளை வைத்திருந்ததால் தேர்தல் விதிமுறை மீறியதாகக் கூறி அதனை நகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

     அப்போது சில பதாகைகள் கிழிக்கப்பட்டதாகக் கூறி விஜய் ரசிகர் மன்றத்தினர், அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி டி.எஸ்.பி. முத்தமிழ் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் பிச்சைப்பாண்டியன், சுரேஷ் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முதல் காட்சியை காண ரசிகர் மன்றத்தினர் திரையரங்குக்குள் சென்று விட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பின்னர் படக்காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியே வந்த போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

     இச்சம்பவம் தொடர்பாக, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காரைக்குடியைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் கார்த்திக் சுப்பிரமணியன் (28), விஜய்ரவி, திருப்பதி, திலீப்குமார், சதீஷ்குமார், பஞ்சுஅருணாசலம், நம்பிராஜன், முத்துப்பாண்டியன் ஆகிய 8 பேரை காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai