Enable Javscript for better performance
\\\"தெறி\\\' வரவில்லை: விஜய் ரசிகர்கள் ரகளை- Dinamani

சுடச்சுட

    

    செங்கல்பட்டில் "தெறி' திரைப்படம் வெளியிடப்படாததால், திரையரங்க வளாகத்தில் காத்திருந்த விஜய் ரசிகர்கள் திடீரென ஜிஎஸ்டி சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

    விஜய் நடித்த "தெறி' திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டன்று திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் லதா திரையரங்கில் திரைப்படம் வெளியாவதாகக் கூறியதை அடுத்து, விஜய் ரசிகர்கள் வியாழக்கிழமை காலையில் திரையரங்க வளாகத்தில் காத்திருந்தனர்.

    அப்போது திரைப்படம் நாளை வெளிவருவதாகக் கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் திடீரென்று செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த காவல்துறையினர், மறியலைக் கைவிட்டுக் கலைந்து போகுமாறு எச்சரித்தனர். அதையும் மீறி கோஷமிட்டவர்களைப் பிடித்து வாகனத்தில் ஏற்ற, மற்றவர்கள் சிதறி ஓடினர்.

    காஞ்சிபுரத்தில் போலீஸ் தடியடி...

    காஞ்சிபுரத்தில் விஜய் நடித்து வெளிவர இருந்த "தெறி' திரைப்படம் வெளியிடப்படாது என்று தகவல் பரவியதைத் தொடர்ந்து பாபு திரையரங்கம் அருகே விஜய் ரசிகர்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     காஞ்சிபுரத்தில் "தெறி' திரைப்படம், பட விநியோகஸ்தருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து திரையரங்கம் அருகே கூடிய விஜய் ரசிகர்கள் திடீரென்று ரகளையில் ஈடுபட்டனர். சாலையில் செல்பவர்களை எல்லாம் தாக்க முயன்றனர். இதன் காரணமாக பாபு திரையரங்கில் இரவு 2-வது காட்சி நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார், பேச்சு நடத்தினர். ஆனால், மது போதையில் இருந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai