Enable Javscript for better performance
பா.ம.க தேர்தல் அறிக்கை: ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்- Dinamani

சுடச்சுட

    

    பா.ம.க தேர்தல் அறிக்கை: ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்

    By dn  |   Published on : 15th April 2016 01:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

    தொழில் வளர்ச்சி

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச்சாளர முறையில் (ஷிவீஸீரீறீமீ கீவீஸீபீஷீஷ் ஷிஹ்stமீனீ) அளிக்கப்படும்.

    ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தொழில் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அ-னுமதியும், நிலம் மற்றும் மானியமும் வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியில் 60% சென்னையிலும், 15% கோவையிலும் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் 25% மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையை மாற்ற தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

    தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை  தூத்துக்குடி தொழில் தாழ்வாரத்தை விரைவாக உருவாக்கி, புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழிற்சாலைகளில் பணியாற்ற சிறந்த மனித வளத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்கல்வி நிலையமும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் அமைக்கப்படும்.

    ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும்.

    புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட விளைநிலமாக இருக்காது.

    சிறு- குறு விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு 50 யூனிட்களிலிருந்து 100 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.

    விசைத்தறியாளர்கள் சூரியஒளி மின்உற்பத்தி கட்டமைப்பை அமைப்பதற்கான மூலப் பொருட்கள் 90 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

    பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதுடன், விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை விற்பனை செய்ய ஜவுளி சந்தையும் ஆரம்பிக்கப்படும்.

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

    தொழில் முதலீட்டை ஈர்க்க ஆணையரகங்கள்

    தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையர்களாக நியமிக்கப்படுவர்.

    ஒவ்வொரு மண்டலத்திலும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்கான முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் பொருளாதார ஆணையர்கள் ஈடுபடுவார்கள்.

    உலக அளவில் ஏற்படும் தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசுக்கு இந்த அமைப்பு பரிந்துரைக்கும். 

    தொழில்தொடங்க முன்வருவோருக்கு ஆலோசனை வழங்குதல், முதலமைச்சரைச் சந்தித்துப் பேச வகை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபடும்.

    வெளிநாடுகளில் நடைபெறும் பொருளாதார மாநாடுகள், தொழில் முதலீட்டுச் சந்திப்புகள் ஆகியவற்றில் மண்டலப் பொருளாதார ஆணையர்களுடன், தமிழக முதலமைச்சர் பங்கேற்று முதலீட்டைத் திரட்டுவார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai