Enable Javscript for better performance
வேட்பாளர் பட்டியலுடன் தில்லி புறப்பட்டு சென்றார் இளங்கோவன் - Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளர் பட்டியலுடன் தில்லி புறப்பட்டு சென்றார் இளங்கோவன்

    By dn  |   Published on : 15th April 2016 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    evks-ilangovan

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

    விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 பேர் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த பட்டியல் தமிழக தேர்தல் குழு முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று காலையில் தில்லி புறப்பட்டு சென்றார். தில்லியில் நாளை காலையில் ஸ்கிரீனிங் கமிட்டி கூடுகிறது.

    இந்த கமிட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மாக்கன், முகுல்வாஸ்னிக், இளங்கோவன், கோபிநாத் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவின் வேட்பாளர் பட்டியலை ஆய்வு செய்வார்கள். அப்போது தகுதி, கட்சிக்கு ஆற்றிய பணிகள் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் வீதம் தேர்வு செய்வார்கள்.

    போட்டி கடுமையாக இருக்கும் தொகுதிகளுக்கு இரண்டு பேரை தேர்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai