Enable Javscript for better performance
Deal With Kashmir Situation With Iron Hand: BJP To State Government- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

    By dn  |   Published on : 09th August 2016 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது காணப்படும் வன்முறைச்  சூழலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வீரேந்தர் குப்தா, ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் உருவாக்கியுள்ள வன்முறைச் சூழலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. இல்லையெனில், நிலைமை மேலும் மோசமடைவதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலை திரும்புவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
    மாநில காவல்துறை, சிபிஆர்எஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தற்போது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், அவர்களின் மன உறுதி குறைந்து வருகிறது.
    கில்கிட், பால்டிஸ்தான் உள்பட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள மக்களின் மீது பாகிஸ்தான் அரசு ஏவி வரும் கொடுமைகளைக் கண்டு தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
    மேலும், பஞ்சாப் மாகாணத்தினரின் ஆதிக்கம் நிறைந்த பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் மோசமான பாரபட்சம், அடக்குமுறைகள் ஆகியவற்றால் சிந்து, பலூசிஸ்தான், வட மேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகிய மாகாணங்களில் வாழும் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற அந்த மாகாணங்கள் போராடுவதைக் கண்டும் காஷ்மீர் இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும் என்றார் வீரேந்தர் குப்தா.
    இதனிடையே, ஜம்முவில் ஐஐடி கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அக்கட்சியின் ஜம்மு விரோத மனநிலை வெளிப்படுவதாக, பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai