Enable Javscript for better performance
Amarinder Singh warns police against registering ‘fake FIRs’ against Congress workers- Dinamani

சுடச்சுட

    

    போலி வழக்குப் பதிவு: காவல் நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்த அம்ரீந்தர் சிங்

    By dn  |   Published on : 13th August 2016 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Amarinder-Singh

    பதிண்டா: அப்பாவி மக்கள் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்வதாகக் கூறி  பஞ்சாபின் பதிண்டா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையமொன்றுக்குள் திங்கள்கிழமை அதிரடியாகச் நுழைந்த அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அம்ரீந்தர் சிங், அங்கிருந்த போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    பஞ்சாப் மாநிலத்தில், பொதுமக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அம்ரீந்தர் சிங்கிடம், பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. போலி வழக்குகளை போலீஸார் தங்கள் மீது பதிவு செய்கின்றனர் என்று சிலர் அம்ரீந்தர் சிங்கிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
    இதைக் கேட்டுக் கோபமடைந்த அவர், அருகில் இருந்த சங்கத் மண்டி காவல் நிலையத்துக்குள் தனது ஆதரவாளர்களுடன் அதிரடியாக நுழைந்தார். ஆளும் அகாலி தள அரசின் தூண்டுதலின் பேரில் போலி வழக்குகளை பதிவு செய்கிறீர்கள் என்று போலீஸார் மீது அம்ரீந்தர் சிங் குற்றம்சாட்டினார்.
    இதையடுத்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்திலும் அவர் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அம்ரீந்தர் சிங் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai