இயக்குநர் பாலு ஆனந்த் காலமானார்
By DN | Published On : 03rd June 2016 12:23 PM | Last Updated : 03rd June 2016 12:28 PM | அ+அ அ- |

'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு' ஆகிய படங்களின் இயக்குநரும், துணை நடிகருமான பாலு ஆனந்த்(61) மாரடைப்பால் காலமானார்.
இவருக்கு நேற்று இரவு 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவனைக்கு அழைத்துச் செல்வதற்குள்ளேயே உயிர் பிரிந்தது. இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.
இவருக்கு மனைவி உமா மகேஸ்வரி. ஸ்ரீவேலுமணி என்ற மகளும், ஸ்ரீசரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவருடைய மறைவுக்கு திரையுலகில் உள்ள பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனிடம் 'பயணங்கள் முடிவதில்லை' உள்ளிட்ட சுமார் 20 படங்களுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றிய பாலு ஆனந்த், 'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காக பிறந்தேன்' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.