மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்தது: நாசா

கடந்த மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்ததென்று, நாசா தெரிவித்துள்ளது.
மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்தது: நாசா

கடந்த மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்ததென்று, நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது.

அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே உள்ள புவி வெப்பமயமாதல் காரணியும் மற்றொரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெயில் சுட்டெரித்த அனுபவம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது லா நினோ என்ற குளிர் சீசன் தொடங்கியுள்ளது. இதனால், வரும் நாட்களில் கூடுதல் குளிர், மழை பதிவாகவும் வாய்ப்புள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியின் மத்திய மற்றும் மேற்பரப்பில் இத்தகைய மாறுதல்களை உணர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com