Enable Javscript for better performance
தமிழகத்துக்கு கடத்த முயன்ற சாராயம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு கடத்த முயன்ற சாராயம் பறிமுதல்

    By புதுச்சேரி,  |   Published on : 04th May 2016 11:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

     புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தேடுவார்நத்தம் கிராமத்தில் உள்ள வீரன்கோயில் அருகில் இருந்து மர்மநபர் ஒருவர் கேனில் சாராயம் கடத்துவதாக தவளக்குப்பம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்  போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர்.

    அப்போது, போலீஸார் வருவதைக் கண்ட அந்த நபர் சாரயபாட்டில்கள், சாராய கேனை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து, அங்கிருந்த 32 சாராய பாட்டில்கள் மற்றும் கேனில் இருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீஸார் கைப்பற்றி, விசாரணை நடத்தினர். விசாரணையில் அபிஷேகப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு சாராயம் கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

     இதையடுத்து போலீஸார் அவரை தேடிவருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயங்களை கலால் துறைனரிடம் போலீஸார் ஒப்பபடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai