Enable Javscript for better performance
வாய்க்காலில் தவறி விழுந்து ஆண்குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் கழிவுநீர் வாய்க்காலில் திங்கள்கிழமை தவறி விழுந்த ஆண்  குழந்தை இறந்தது.

     மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம்(30). இவர்களது மகன் நாகமணி(இரண்டரை வயது). வீட்டின் பின்பகுதியில் உள்ள ஓடைக் கரையில் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தானாம்.

    அப்போது அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் எதிர்பாராவிதமாக தவறி விழுந்து விட்டான். அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

     சம்பவம் தொடர்பாக கீரைத்துறைப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai