Enable Javscript for better performance
ஜூன் 7ம் தேதி 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 7ம் தேதி 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

    By dn  |   Published on : 21st May 2016 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Pm-modi-

    பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 7ம் தேதி 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார். முன்னதாக,  ஜூன் 4-ந் தேதி  2 நாட்கள் பயணமாக கத்தார் நாட்டுக்கு பிரதமர் செல்கிறார்.

    அங்கிருந்து ஈரானுக்கு சென்று விட்டு அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு ஒபாமாவை சந்திக்கும் அவர், பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பால் ரியான் அழைப்பின்பேரில், அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் உரையாற்றும் 5-வது இந்திய பிரதமர் மோடி ஆவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai