Enable Javscript for better performance
அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்தமருத்துவ பரிசோதனை திட்டம்: ஜிப்மரில் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை திட்டம்: ஜிப்மரில் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th November 2016 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, 

    அகில இந்திய வானொலி (புதுச்சேரி) ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை திட்டம் ஜிப்மர் மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

    அகில இந்திய வானொலி நிலையம் புதுச்சேரியுடன் இணைந்து பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஜிப்மர் நடத்திநவருகிறது. மேலும் ஜிப்மர் அனைவருக்கும் நலவழிக்கல்வி திட்டத்தை வெற்றிகரமாக பொதுமக்களிடையே கொண்டு செல்வதில் வானொலி நிலையம் முக்கிய பங்காற்றுகிறது.

    அகில இந்திய வானொலி நிலையத்தின் பொன்விழா ஆண்டை பாராட்டும் நோக்கில் ஜிப்மர் சார்பில் வானொலி நிலைய ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு வானொலி நிலைய ஊழியர்களுக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த கார்டு மூலம் அவர்களுடைய ஆண்டு மருத்துவ அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். 

    ஜிப்மரில் நடந்த திட்டதுவக்கவிழாவில் இயக்குனர் டாக்டர் பரிஜா  திட்டத்தை துவக்கி வைத்து முதல் ஸ்மார்ட் கார்டை வானொலி நிலைய துணை இயக்குனர் பிரபாகரனுக்கு வழங்கினார்.

    ஜிப்மர் மருத்துவகண்காணிப்பாளர் டாக்டர் ஜெ.பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். வானொலி நிலைய ஊழியர்கள், ஜிப்மர் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கு பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai