Enable Javscript for better performance
இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாகும் கோவா- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாகும் கோவா

    By DIN  |   Published on : 28th November 2016 07:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டிசம்பர் 31-ம்தேதி முதல் இந்தியாவின் முதல்  பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் மாறவுள்ளதாக கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

    மேலும் இத்திட்டம் குறித்து கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா கூறியதாவது: -"கோவாவில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 17 லட்சம் மொபைல் இணைப்புகள் உள்ளன. 22 லட்சம் வங்கிக்கணக்குகள் இருக்கின்றன. அரசிடம் பதிவு பெற்ற வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் வங்கியிடமிருந்து எம்எம்ஐடி கோடு ஒன்று அளிக்கப்படும்.

    இதற்கு மக்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக *99# என்ற எண்ணிற்கு போன் செய்து சில வழிமுறைகளைப் பின்பற்றினால், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் பொருட்கள் வாங்கும்போது இந்த எம்.எம்.ஐ.டி கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.  

    இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் தொடங்கி ஆப்பிள் ஐ-போன்கள் வரை ரொக்கமில்லாமல் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம்தான் வாங்க முடியும். என்று கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai