Enable Javscript for better performance
கூடங்குளம் முதல் உலையில்  மின் உற்பத்தி நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி, 

    கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறனுடன் கூடிய இரு உலைகள் இயங்கி வருகின்றன. இவை தவிர 3, 4-ஆவது உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், முதலாவது உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியதாவது:

     முதலாவது அணு உலையில் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26-ஆம் தேதி வரையில் 6244.24 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலையானது தொடர்ந்து 278 நாள்களுக்கு இயங்கியுள்ளதால், பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக 815 மெகாவாட் வரையிலும் முதல் உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இப்போது, பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க குறைந்தது 10 நாள்களுக்கு மேலாகும். இருப்பினும், இரண்டாவது உலையில் தொடர்ந்து மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலையில் இப்போது, 680 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது, படிப்படியாக உயர்த்தப்பட்டு முழு கொள்ளளவு எட்டப்படும். அதன்பிறகே வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai