Enable Javscript for better performance
கேரளாவில் பெற்ற தாயை விளக்குமாற்றால் அடித்த மகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரளாவில் பெற்ற தாயை விளக்குமாற்றால் அடித்த மகள் கைது 

    By DIN  |   Published on : 28th November 2016 05:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளாவில் பெற்ற தாயை விளக்குமாற்றால் மகள் அடிக்கும் காட்சி ஒன்று நேற்று இணையத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் இன்று அந்த பெண்ணை கைது செய்தனர். இதுகுறித்து போலீதரப்பில் கூறப்படுவதாவது: -

    75 வயதான அந்த மூதாட்டி படுக்கையில் சிறுநீர் போனதற்காக பெற்ற மகளே அவரை விளக்குமாற்றால் தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து "அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்துள்ளோம். தாக்கப்பட்ட முதியவரான கார்த்தியானி அம்மா (75) தற்போது தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தாயாரை அடித்த அந்த பெண்ணின் பெயர் சந்திரமதி. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்க சென்றபோது தாயாரை கவனித்துக் கொள்வது மகனின் கடமை. மகளின் வேலையல்ல என்று சந்திரமதி தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai