Enable Javscript for better performance
சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு பரோல் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு பரோல் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 28th November 2016 05:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subrata_roy

    சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயின் பரோல் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

    மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து, சஹாரா நிதி நிறுவனம், செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, புகார் எழுந்தது.

    இதையடுத்து, சஹாரா குழுமத்தின் தலைவர், சுப்ரதா ராயை 2014 மார்ச் மாதம் சி.பி.ஐ., கைது செய்து தில்லி திஹார் சிறையில் அடைத்தது. சஹாரா குழுமத்தின் இயக்குனர்கள், அசோக் ராய் சவுத்ரி, ரவி சங்கர் துபே ஆகியோரும், திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்ரதா ராயின் தாய் மே மாதம் காலமானார்.

    அவரது இறுதி சடங்கில் பங்கேற்க சுப்ரதா ராய்க்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பரோல் காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. மேலூம் முதலீட்டாளர்களிடம் முறை கேடாக திரட்டிய 24,029 கோடி ரூபாயை, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 15% வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தொகையை செலுத்த ராயும், அவரது குழுமமும் பல நடவடிக்கை எடுத்துவந்தது. ஆனால் தொகையை செலுத்த முடியவில்லை.

    இந்நிலையில் மீண்டும் அவருக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை பரோல் நீட்டித்து  உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த பரோல் காலத்தில் சிறைக்கு வெளியில் இருக்கும் சுப்ரதா ராய் 600 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறினால் பிப்ரவரி 6ம் தேதி சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai