Enable Javscript for better performance
சீன கட்டட விபத்து: மேலும் 9 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெய்ஜிங்: சீனாவில் மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியின்போது நிகழ்ந்த விபத்து தொடர்பாக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீஸார் இன்று தெரிவித்துள்ளனர். இந்த கட்ட விபத்து தொடர்பாக ஏற்கனவே 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள ஃபெங்ஷெங் நகரில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான குளிரூட்டும் கோபுரம் பணி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி 74 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கவனக் குறைவு மூலம் உயிரிழப்புக்குக் காரணமான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கட்டுமானப் பணியின்போது நிகழ்ந்த விபத்து தொடர்பாக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai