Enable Javscript for better performance
ஜெ.குரு மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பு: உயர்நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஜெ.குரு மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பு: உயர்நீதிமன்றம்

    By DIN  |   Published on : 28th November 2016 08:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜெ.குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2012-ஆம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் உள்ள பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில்  வன்னியர் சங்கத்தின் பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த அச்சங்கத்தின் தலைவர் ஜெ.குரு, மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, தாழம்பூர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி ஜெ.குரு சார்பில் செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, வழக்கிலிருந்து ஜெ.குரு-வை விடுவிக்க மறுத்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.குரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,

    நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து விதிவிலக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்கு  தடை விதித்தும், நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai