Enable Javscript for better performance
புதுவை வங்கிகள், ஏடிஎம் மையங்களில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு: வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை வங்கிகள், ஏடிஎம் மையங்களில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு: வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

    By DIN  |   Published on : 28th November 2016 09:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி,

    புதுச்சேரியில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவற்றில் பணம் இல்லாததை அறிந்து வங்கி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். 

    இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் திங்கள்கிழமை வங்கிகள் திறக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான வங்கிகளில் பணமில்லாத காரணத்தினால் வாடிக்கையாளர்கள் யாருமின்றி வெறிச்சோடி கிடந்தன. புதுச்சேரியின் பிரதான பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் மையம் திறந்திருந்தும், பணமில்லாததால் வந்து பார்த்து ஏமாற்றம் அடைந்து சென்றனர். வங்கியின் மற்ற சேவைகளுக்காக வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

    இந்நிலையில்  வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணம் இன்றி மக்கள் அவதியுறுவதாக முதல்வர் நாராயணசாமிக்கு தொலைபேசி மூலம்  புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து புதுச்சேரியின் பிரதான ஸ்டேட் வங்கிக் கிளைக்கு சென்ற அவர் ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது பணம் இல்லை என தகவல் தெரிய வந்த்தையடுத்து, வங்கி அதிகாரியை அழைத்து விசாரித்தார்.

    அப்போது பிரதான கிளையில் பணம் இல்லை என்றால், மக்கள் எங்கு சென்று பணம் எடுப்பார்கள் என்று அதிகாரியிடம் கடிந்து கொண்ட முதல்வர் உடனடியாக ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்ப வலியுறுத்தினார். இதனையடுத்து புஸ்சி வீதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு சென்ற நாராயணசாமி, அங்கு ஏடிஎம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருப்பதை கண்டார். உடனடியாக அவர்களை சந்தித்து பேசினார். 

    அப்போது புதுச்சேரியில் சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் மட்டுமே பணம் எடுக்க முடிவதாக மக்கள் தெரிவித்தனர். இதற்காக வங்கி அதிகாரிகளை பாராட்டிய முதல்வர், புதுச்சேரியில் 300-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. இதற்கு பிரதமரின் அவசர அறிவிப்பே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

    அரசு ஊழியர்களுக்கு ரொக்க ஊதியம்? புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ரொக்க பணமாக சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai