Enable Javscript for better performance
மார்த்தாண்டம் அருகே  சாஸ்தா கோயிலில் வெள்ளி நாகர் சிலை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே  சாஸ்தா கோயிலில் வெள்ளி நாகர் சிலை திருட்டு

    By DIN  |   Published on : 28th November 2016 05:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்த்தாண்டம் அருகே சாஸ்தா கோயிலில் இருந்து வெள்ளி நாகர்சிலை, டி.வி.டி. பிளேயர் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மார்த்தாண்டம் அருகே விளாக்கோடு தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இக் கோயிலில் சனிக்கிழமை இரவு பூஜை முடித்து பூசாரி கோயிலை பூட்டிச் சென்றார்.

    ஞாயிற்றுக்கிழமை கோயிலில் பூஜைக்காக வந்த போது கோயில் அறை திறந்து கிடந்தது. மேலும் அங்கிருந்த 650 கிராம் எடையுள்ள வெள்ளியிலான நாகர் சிலை, 9 பித்தளை தட்டுகள் மற்றும் டி.வி.டி. பிளேயர் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து கோயில் நிர்வாகத் தலைவர் அரிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ...
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai